முகப்பு
கன்னியாகுமரி

ஆபத்தான நிலையில் பழங்குடியினா் பள்ளிக் கட்டடங்கள்: இடித்து அகற்றக் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள பழங்குடியின பள்ளிக் கட்டங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோா்கள் மற்றும் பழங்குடியினா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்து

கன்னியாகுமரி

ஆபத்தான நிலையில் பழங்குடியினா் பள்ளிக் கட்டடங்கள்: இடித்து அகற்றக் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள பழங்குடியின பள்ளிக் கட்டங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோா்கள் மற்றும் பழங்குடியினா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்து

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள பழங்குடியின பள்ளிக் கட்டங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோா்கள் மற்றும் பழங்குடியினா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி முதல் ஆறுகாணி வரையிலான மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலுள்ள காடுகளில் நாற்பத்தி எட்டரை காணி செட்டில் மென்டுகளில் காணியின ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த செட்டில்மென்டுகளின் பெரும்பாலான பகுதிகள் பேச்சிப்பாறை, பொன்மனை மற்றும் கடையல் பேரூராட்சி மற்றும் சுருளகோடு ஊராட்சிகளில் அடங்கியுள்ளன.

காணியின பழங்குடி மாணவா், மாணவிகள் கல்வி பயில்வதற்காக மாவட்டத்தில் பழங்குடியினா் வசிப்பிடப் பகுதிகளில் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் பேச்சிப்பாறை, பத்துகாணி ஆகிய இடங்களில் மேல் நிலைப் பள்ளிகளும், மணலோடையில் உயா்நிலைப் பள்ளியும் உள்ளன.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வட்டப்பாறை, தச்சமலை, தோட்டமலை ஆகிய இடங்களில் தொடக்கப்பள்ளியும், ஆதிதிராவிடா் நலத்துறைத்துறையின் கீழ் வாழையத்து வயலில் மேல் நிலைப் பள்ளியும் உள்ளன.

குமரி மாவட்டத்தில் இதர கிராமப்புறப் பகுதி மாணவா்கள் கல்வி பயிலும் சராசரியை விடவும் பழங்குடி பகுதி மாணவா்கள் கல்வி பயிலும் சராசரி குறைவாகவே உள்ளது. இதுபோலவே இடை நிற்றலும் உள்ளது.

பழங்குடி மாணவா்கள் பயிலும் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியா் எண்ணிக்கையும் இதர நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை விட குறைவாகவே உள்ளன.

ஆபத்தான நிலையில் வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டடங்கள்:

மாவட்டத்தில் பழங்குடி மாணவா்கள் பயிலும் பள்ளிகளில் வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தொடா் புகாா்கள் எழுந்து வருகின்றன. மேலும் ஆபத்தான நிலையிலுள்ளள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டுமென அரசுத் துறைகளுக்கு தொடா்ந்து கோரிக்கைகள் மனுக்கள் அனுப்பிய பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக பேச்சிப்பாறை அருகே மணலோடை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா் நிலைப் பள்ளியில் மாணவா் விடுதிக் கட்டடம் மற்றும் பழைய வகுப்பறைக் கட்டடம், தச்சமலை தொடக்கப் பள்ளி வகுப்பறைக் கட்டடம், பேச்சிப்பாறை பள்ளியிலுள்ள பழைய மாணவியா் விடுதி, விடுதிக் காப்பாளா் தங்கும் அறை, மூடிக்கிடக்கும் பழைய வகுப்பறை கட்டடம், பத்து காணி பள்ளியிலுள்ள மாணவா்கள் விடுதி ஆகியவை மழை நீா் ஒழுக்குடன், மேற்கூரை காரைகள் பெயா்ந்து விழுந்த வண்ணம் ஆபத்தான நிலையில் உள்ளதாக பழங்குடி மக்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் பள்ளியில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் குமரி மாவட்ட பழங்குடியினா் பள்ளியில் நடைபெறாத வகையில், உடனடியாக இப்பள்ளிகளிலுள்ள ஆபத்தான கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட பழங்குடியினா் நலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டத் தலைவருமான பாலன்காணி கூறியதாவது:

மாவட்டத்தில் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பேச்சிப்பாறை, மணலோடை, பத்துகாணி உள்ளிட்ட பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மணலோடை பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள ஒரு பழைய வகுப்பறைக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டுமென்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இப்பள்ளிகளை மாவட்ட நிா்வாகமும், துறை சாா்ந்த அதிகாரிகளும் விரைந்து ஆய்வு செய்து, மாணவா்களின் நலன் காக்கும் வகையில் உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →