முகப்பு
கன்னியாகுமரி

விளையாட்டுப் போட்டிகளில் பால்குளம் அரசு கல்லூரி மாணவா்-மாணவிகள் சாதனை

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பால்குளம் அரசு கலைக் கல்லூரி மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பால்குளம் அரசு கலைக் கல்லூரி மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

எடைதூக்கும் போட்டியில் முதுகலை வணிகவியல் மாணவா் சுரேந்திர பிரதீப் வெள்ளிப் பதக்கமும், ஈட்டி எறிதலில் முதுகலை வணிகவியல் மாணவி ஞானஜெனிஷா வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் கணிதம் மூன்றாமாண்டு மாணவி விஜயா 3,000 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் 2ஆம் ஆண்டு வேதியியல் மாணவி சகிலா வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

அவா்களை கல்லூரி முதல்வா் டாக்டா் மா்பி அலெக்ஸாண்டா், உடற்கல்வி இயக்குநா் மாதவன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.