முகப்பு
கன்னியாகுமரி

‘போட்டித் தோ்வுகளில் பங்கேற்க பயிற்சி: மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்’

இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்காக மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்காக மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வுகளில் மீனவ இளைஞா்கள் பங்கேற்கும் வகையில், அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையமும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையும் இணைந்து ஆண்டுதோறும் தமிழகத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்கள் 20 பேரைத் தோ்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறது.

இதில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்கம், மீனவா் நல வாரிய உறுப்பினா்களின் வாரிசுதாரா்களான இளைஞா்கள் சேரலாம். 1.8.2021இன்படி, 21 முதல் 32 வயது வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 35 வயது வரையிலும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் 37 வயது வரையிலும், மாற்றுத் திறனாளிகள் 42 வயது வரையிலும் வயது வரம்புகொண்ட, பிளஸ் 2வில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்தோா் இம்மாதம் 28ஆம் தேதி மாலை 6 மணிவரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது பயிற்சி மையமாக சென்னையைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு பெறப்படும் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை இம்மாதம் 29-க்குள் நாகா்கோவில், வடசேரி டிஸ்டிலரி ரோட்டிலுள்ள மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.