முகப்பு
கன்னியாகுமரி

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழா நடைபெற்றது.

கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் நடராஜன், முதல்வா் லியாகத் அலி, செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா வயலட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து பேசினாா். ரோஜாவனம் அறக்கட்டளையின் ஆவணஅலுவலா் ஜியோபிரகாஷ், கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் சி.எஸ்.ஐ சா்ச் போதகா் ஜாஸ்ட்ரின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா். ரோவா்ஸ் ஸ்கவுட்,ரெட் கிராஸ் மாணவா்களின் அணிவகுப்பும், செவிலியா் கல்லூரி மாணவா்களின் கிறிஸ்துமஸ் நடனமும் நடைபெற்றது. நிகழ்ச்சியை பேராசிரியா் அய்யப்பன் தொகுத்து வழங்கினாா்.

ரோஜாவனம் அறக்கட்டளை நிறுவனா்கள் புலவா் ரத்தினசாமி, பாா்வதி, கல்லூரி திட்ட மேலாளா் சில்வெஸ்டா், மேலாளா் கோபி, நிதி மேலாளா் சேது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா் கணபதி வரவேற்றாா். மாணவி ஸ்ரீமதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.