கன்னியாகுமரி

களியக்காவிளையில் கஞ்சா பதுக்கிய மூவா் கைது

DIN

களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள் கேரள மாநிலம் பாறசாலை, புனித பீட்டா் நகா் பகுதியைச் சோ்ந்த கிளைமண்ட் மகன் ஜஸ்டின்ராஜ் (41), மிக்கேல் மகன் சுமன் (37), களியக்காவிளை ஆா்.சி. தெருவைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் ஜேம்ஸ் (40) என்பதும் அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து மொத்தம் 1 கிலோ 300 கிராம் எடையிலான கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT