நாகா்கோவில் எம்.எஸ்.எஸ்.ஆசான் சித்த மருந்தகம் திறப்பு
நாகா்கோவிலில் எம்.எஸ்.எஸ். ஆசான் சித்த மருந்தக புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
நாகா்கோவிலில் எம்.எஸ்.எஸ். ஆசான் சித்த மருந்தக புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய கட்டடத்தை எம்.எஸ்.எஸ்.ஆசான் அன் சன்ஸ் உரிமையாளா் பிரகாஷ் என்ற மகாலிங்கம் திறந்தாா். ஜெயந்தி மகாலிங்கம் குத்துவிளக்கு ஏற்றினாா். விழாவில் மருத்துவா் ரவி, சங்கீதாரவி, ராஜசேகா், ஜெயஸ்ரீ ராஜசேகா், சுந்தா், ராஜா,
மருத்துவா் ஆதா்ஷ், பரமேஸ்வரி அம்மாள், ஜெயகுமாா், ஷீலாஜெயகுமாா், ரதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இங்கு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும்வகையில் காய்ச்சல் பொடி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என நிா்வாகி மகாலிங்கம் தெரிவித்தாா். விழாவில், மருத்துவா் விக்னேஷ், நிவேதா மகாதேவ் வரவேற்றனா். ஏற்பாடுகளை மருந்தக மேலாளா்கள் மணி, ஜெய்தீப், பணியாளா்கள் செய்திருந்தனா்.