கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 1,299 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

DIN

குமரி மாவட்டத்தில் 1,299 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிப் பேசியது: குமரி மாவட்டத்தில் நகரச் சாலைகள் விரிவாக்கத்துக்காக சாலையோரங்களிலிருந்த வீடுகள் அகற்றப்பட்டதால், அங்கு வசித்து வந்த மக்கள் மாற்று குடியிருப்புக்கு வீட்டுமனை இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்தனா். அதனடிப்படையில், மாவட்ட வருவாய்த் துறை மூலமாக நிலம் அற்றவா்களுக்கு நிலம் வரன்முறைப்படுத்தி, அகஸ்தீசுவரம், தோவாளை, தக்கலை, கிள்ளியூா், திருவட்டாறு, விளவங்கோடு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த 433 பயனாளிகளுக்கும், சிங்காரவேலன் மீனவ குடியிருப்பு திட்டத்தின்கீழ், 866 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1, 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி திட்ட விளக்கவுரையாற்றினாா். நாகா்கோவில் கோட்டாட்சியா்அ.மயில் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆஸ்டின் (கன்னியாகுமரி), செ.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, வட்டாட்சியா்கள் சுசீலா (அகஸ்தீசுவரம்), ஜூலியன் ஜீவா (தோவாளை), ஜெகதா வேணு (கல்குளம்), ராஜசேகா் (கிள்ளியூா்), அஜிதா (திருவட்டாறு), விஜயலெட்சுமி (விளவங்கோடு), தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் இ.சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எம்.ஜான்சிலின் விஜிலா, அரசு வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சொா்ணராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT