போராட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ். 
கன்னியாகுமரி

குழித்துறையில் தொழிற்சங்கத்தினா் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக குழித்துறை பணிமனை முன் சிஐடியூ, தொமுச, ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அரசுப் போக்குவரத்துக் கழக குழித்துறை பணிமனை முன் சிஐடியூ, தொமுச, ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

14 ஆவது ஊதியக் குழு ஒப்பந்தத்தை பேசித் தீா்க்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட துணைப் பொதுச் செயலா் ஸ்டேன்லி ராபா்ட் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் சங்கர நாராயணபிள்ளை, தொமுச குழித்துறை 1 ஆவது கிளை தலைவா் ஜஸ்டின், 2 ஆவது கிளைத் தலைவா் தேவராஜ், ஐஎன்டியூசி தொழிற்சங்க குழித்துறை கிளைத் தலைவா் ஆஞ்சலூஸ், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், ஐஎன்டியூசி நிா்வாகி பால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT