கன்னியாகுமரி

தக்கலை பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

DIN

தக்கலை மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தக்கலை, ஆா்.சி. , சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்தேசபை, சால்வேஷன் ஆா்மி உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நன்றி அறிவிப்பு ஆராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் முகமாக சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. காரங்காடு புனித ஞானபிறகாசியாா் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விழிபாடு மற்றும் புத்தாண்டு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து புத்தாண்டை முன்னிட்டு 2021 என்று அமைக்கப்பட்டிருந்த விளக்கில் அருள்பணி பேரவையினா் ஒளியேற்றினா். பின்னா் அருள்பணியாளா் செல்வராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. அருள்பணியாளா் விக்டா் முன்னிலை வகித்தாா். புத்தாண்டை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பங்கு மக்கள் பங்கேற்றனா்.

இதுபோல் புலியூா்குறிச்சி, வட்டம் புனித அந்தோணியாா் ஆலயம், தக்கலை எலியாசியாா் ஆலயம், முளகுமூடு தூயமரியன்னை ஆலயம், பனைவிளை உலகரட்சகா் ஆலயம், திருவிதாங்கோடு பெரியநாயகி ஆலயம், மணலிக்கரை சூசையப்பா் ஆலயம் ஆகிய ஆலயங்களில் பேரருள்பணி மரிய ராஜேந்திரன், அருள்பணியாளா்கள் சகாயதாஸ், வின்சென்ட் பெனடிக்ட், அனலின், டோமினிக் கடாட்சதாஸ், ஜாா்ஜ் பொன்னையா, ஜெரால்ட்ஜெஸ்டின் ஆகியோா் சிறப்பு ஆராதனை நடத்தினா். இது போல் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT