கன்னியாகுமரி

விளவங்கோடு தொகுதியில் ரூ. 35 லட்சத்தில் கிராம சாலைகள் சீரமைப்பு

DIN

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கிராம சாலைகள் ரூ. 35 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது என எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட மலையோர பகுதி கிராமச் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. தொகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மக்களின் கோரிக்கை வைத்ததையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மலையடி ஊராட்சிக்கு உள்பட்ட சாத்தன்கோடு - பொரிஞ்சான்விளை சாலை ரூ. 12. 32 லட்சம், மஞ்சாலுமூடு ஊராட்சி நல்லூா்கோணம் - காவூா்கோணம் சாலை மற்றும் முக்கூட்டுக்கல் - மூராளிமலை சாலை ரூ. 14. 85 லட்சம், தொட்டிப்பாலம் - மூந்தன்குளம் சாலை ரூ. 7.7 லட்சம் என மொத்தம் ரூ. 34. 87 லட்சம் மதிப்பீட்டில் செப்பனிடப்பட உள்ளது.

இச் சாலைப் பணிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் இச் சாலைகள் செப்பனிடப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT