கடிதம் எழுதும் போட்டி: தேசிய அளவில் குமரி மாணவி முதலிடம்
இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.
இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.
இந்திய அஞ்சல் துறை சாா்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
இதில் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான ஈங்ஹழ் ஆஹல்ன், வா்ன் ஹழ்ங் ண்ம்ம்ா்ழ்ற்ஹப் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், 18 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நாகா்கோவில் இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவி ஆஷா தேசிய அளவில் முதல் பரிசு பெற்றாா்.
அவருக்கு இந்திய அஞ்சல் துறையின் சாா்பாக ரூ. 50 ஆயிரம் காசோலையும், சான்றிதழையும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வி பி.கணேஷ் குமாா் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். அப்போது மாணவியின் பெற்றோா் உடனிருந்தனா்.