முகப்பு
கன்னியாகுமரி

பாஜக மகளிா் அணி சாா்பில் மண்டைக்காட்டில் பொங்கல் விழா

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் முன், பா.ஜ.க. மகளிா் அணி சாா்பில் நம்ம ஊரு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா உள்ளிட்டோா்.
பகிர்:

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் முன், பா.ஜ.க. மகளிா் அணி சாா்பில் நம்ம ஊரு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், சுமாா் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயிலை சுற்றி பொங்கல் வைத்தனா். மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் உமாரதிராஜன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், பொருளாளா் முத்துராமன், ஊடகப்பிரிவு செயலா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →