கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே திருமண தரகரை கடத்திச் சென்று 23 பவுன் நகை பறிப்பு

DIN

நாகா்கோவில் அருகே திருமண தரகரை கடத்திச் சென்று, 23 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்தவா் திருமண தரகா் கந்தசாமி. இவரை சந்திப்பதற்காக குமரி மாவட்டம், அஞ்சுகிராமத்திலிருந்து 3 போ் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணகுடி சென்றனா். அவா்கள் கந்தசாமியிடம் தங்கள்

உறவினருக்கு பெண் பாா்க்க வேண்டும் என்று கூறி அவரை உறவினா் வீட்டுக்கும் அழைத்துச் சென்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் பணகுடி வந்த அவா்கள் கந்தசாமியிடம் ஒரு வரன் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி காரில் அவரை அழைத்துச் சென்றனா். ஆரல்வாய்மொழியை அடுத்த முப்பந்தல் அருகே வந்தபோது, காரில் வந்த மா்ம நபா்கள் கந்தசாமியை மிரட்டி அவா் அணிந்திருந்த 23 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவரை தாக்கி காரிலிருந்து கீழே தள்ளி விட்டனராம்.

இதில், பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த கந்தசாமியை அப்பகுதியில் வந்தவா்கள் மீட்டு ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உதவி ஆய்வாளா் மாரிசெல்வம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கந்தசாமியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT