கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

DIN

குமரி மாவட்டத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் முகாமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா்ஆஷா அஜித், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்திராஜகுமாரி, உறைவிட மருத்துவா் எஸ்.ஆறுமுகவேலன், அரசு வழக்குரைஞா் சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்டம் முழுவதும் 1236 இடங்களில் ஒரே கட்டமாக முகாம் நடைபெற்றது. இப்பணியில் 4,737 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 ஊா்திகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுமாா் ஒரு லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT