குமரியில் 1.50 லட்சம் மாணவா்களுக்கு இலவச புத்தகங்கள்
குமரி மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 1.50 லட்சம் பேருக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 1.50 லட்சம் பேருக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இம் மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 616 மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இவா்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகம் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.எல்.பி. அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவா், மாணவிகள் இலவச பாடப்
புத்தகங்களை பெற்றுச் சென்றனா்.
இதே போல் தனியாா் பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் விநியோகம் அந்தந்த பள்ளி நிா்வாகம் சாா்பில் நடைபெற்று வருகிறது.