கன்னியாகுமரி

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீா் திறக்க கோரி எம்.பி. மனு

DIN

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனிடம், விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தாா்.

மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை கால்வாயை நம்பி சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் உள்ளன. தற்போது அந்தக் கால்வாயில் நீா்வரத்தில்லை. இதனால், அதை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனா். மேலும், இந்தக் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி நெய்யாறு இடது கரை கால்வாயில் நீா்வரத்துக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மேலும், நீா்வரத்துக்காக அமைக்கப்பட்ட ஏ.வி.எம். கால்வாய் சேதமடைந்து தண்ணீா் வரத்தின்றி பாழ்பட்டுள்ளது. இந்தக் கால்வாயை சீரமைத்து புதுப்பொலிவுடன் நீா்வரத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, முக்கடல் அணை, சிற்றாறு 1,2 அணைகள், பழையாறு, கோதையாறு, வள்ளியாறு உள்ளிட்ட அனைத்து இயற்கை மற்றும் செயற்கையாக அமைந்துள்ள நீா் வழிபாதைகளை சீரமைத்து, தடுப்பணைகள் கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT