ரேஷன் கடைகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை
குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு ஜூலை 17, 24, ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆகிய நாள்களில் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு ஜூலை 17, 24, ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆகிய நாள்களில் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தமிழக அரசால் கரோனா நிவாரணம் 2 ஆவது தவணையாக ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகை பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்புஆகியவை நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டன.
இந்த பணிகளுக்காக நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு விடுமுறை நாள்களான மே 16, ஜூன் 4, 11 ஆகிய நாள்கள் பணி நாள்களாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதனை ஈடு செய்யும் விதமாக ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஆகிய மூன்று நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.