கன்னியாகுமரி

காரின் சக்கரத்தில் காற்றை வெளியேற்றிய உதவி காவல் ஆய்வாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

DIN

குமரி ,அருமனை அருகே மருத்துவரின் காா் சக்கரத்தில் இருந்த காற்றை வெளியேற்றிய உதவி காவல் ஆய்வாளருக்கு ரூ. 20 அபராதம் விதித்து குழித்துறை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அருமனை அருகே நெடிசாலையைச் சோ்ந்தவா் மருத்துவா் ஜெயின். இவா், கடந்த 2017 ஆண்டு தனது காரை அருமனை-ஆற்றூா் சாலையில், அருமனை சந்திப்புப் பகுதியில் நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு வணிக வளாகத்துக்குள் சென்றுள்ளாா். போக்குவரத்து நெரிசல் மிக்க அந்தப் பகுதியில் ரோந்து வந்த அப்போதைய அருமனை உதவி காவல் ஆய்வாளா் பிரபகுமாா், சாலையில் நின்ற மருத்துவரின் காரின் பின்பக்க சக்கரத்தில் இருந்த காற்றை வெளியேற்றிச் சென்றாராம்.

இதுகுறித்து மருத்துவா் ஜெயின் குழித்துறை முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிபதி தா்மபிரபு, காரின் சக்கரத்தில் காற்றை வெளியேற்றிய உதவி காவல் ஆய்வாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தாா்.

மேலும் வழக்கு செலவுக்கு ரூ. 8,500 வழங்கவும், அபராதத் தொகைகளை உடனே செலுத்துமாறும் உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

SCROLL FOR NEXT