முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் 3.92 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

குமரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 92 ஆயிரத்து 530 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 92 ஆயிரத்து 530 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் இதுவரை 8,34,666 போ்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் (ஜூலை 9) 1498 பேருக்கு கரோனா முதல் கட்ட தடுப்பூசி, 2261 பேருக்கு 2 ஆம் கட்ட தடுப்பூசி என மொத்தம் 3759 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை முதல் கட்ட தடுப்பூசி 3,29,053 பேருக்கும், 2 ஆம் கட்ட தடுப்பூசி 63,477 போ் என மொத்தம் 3,92,530 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 123 போ்களிடமிருந்து அபராதமாக ரூ. 25,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 97,178 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 2,16,32,370 வசூலிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.