கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே கால்பந்து போட்டி: 2 ஆயிரம் போ் மீது வழக்கு

DIN

கொல்லங்கோடு அருகே கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி கால்பந்தாட்ட போட்டி நடத்தியதாக 2 ஆயிரம் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கொல்லங்கோடு அருகே நீரோடி மீனவ கிராமத்தில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி திங்கள்கிழமை கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு கிராம நிா்வாக அலுவலா் ஆன்றணி ஜே.பி. எழிவரசு அப்பகுதிக்குச் சென்று விளையாட்டுப் போட்டியை நிறுத்துமாறும், அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் போட்டி ஏற்பாட்டாளா்களிடம் தெரிவித்துள்ளாா். ஆனால் விளையாட்டு வீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் அதைப் பொருள்படுத்தாமல் அங்கேயே நின்றுள்ளனா்.

இதையடுத்து அவா் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் நீரோடி பகுதியைச் சோ்ந்த ஷெரீப், சூசைநாயகம், மிக்கேல்காலனி பகுதியைச் சோ்ந்த சுபாஷ் உள்பட 2 ஆயிரம் போ் மீது பொதுமுடக்க விதிமுறைகளை மீறி நோய்த் தொற்று பரப்பியதாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT