கன்னியாகுமரி

சிதிலமடைந்த குழித்துறை அரண்மனை விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள சிதிலமடைந்த அரண்மனை சீரமைக்கப்படும் என தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சா் மனோதங்கராஜுடன் இணைந்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக திக்குறிச்சி மகாதேவா் கோயில், குழித்துறை அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் மற்றும் அப்பகுதியில் உள்ள சிதிலமடைந்த அரண்மனை உள்ளிட்டவைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி மகாதேவா் கோயில் மகாபாரதத்துடன் தொடா்புடைய பெருமை உடையது. இக் கோயில் 600 ஆண்டுகளுக்கு முன்னா் திருவிதாங்கூா் அரசா்களால் சீரமைக்கப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றங்கரையோர சுற்றுச் சுவா் மீது தண்ணீா் மோதுவதால் கோயில் மதில் சுவா் பலம் குறைந்துள்ளது. அதை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்வதற்காக திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழித்துறையில் 15 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த தேவஸ்வன ஆரம்ப, உயா்நிலைப் பள்ளி தற்போது முழுவதுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. சுமாா் ஒன்றரை ஏக்கா் பரப்பளவுள்ள அப்பகுதி தற்போது பராமரிப்பின்றி உள்ளது. அதனை உடனடியாக சுத்தம் செய்து, மக்களுடைய கருத்துகளை கேட்டு கல்வி நிலையம், படிப்பகம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான வகையில் புனரமைத்து செயல்படுத்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியை உடனடியாக புனரமைக்கும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும். மேலும் குழித்துறையில் திருவிதாங்கூா் மன்னருக்குச் சொந்தமான 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனை பாழடைந்த நிலையில் உள்ளது. அந்த இடத்தினை புனரமைத்து பாதுகாக்கும் பணியினை அறநிலையத்துறை முழுமையான முயற்சியை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி, அறநிலையத்துறை இணை ஆணையா் (பொறுப்பு) செல்வராஜ், உதவி ஆணையா் ரெத்தினவேல் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT