முகப்பு
கன்னியாகுமரி

கரும்புச் சாறு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் சாவு

மண்ணச்சநல்லூரில் கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மண்ணச்சநல்லூரில் கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் அருகே தெற்கு தத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பதி (35). இவருக்கு மனைவி இளவரசி (32) மகள் நிஷாந்தினி (6), மகன் பத்ரிநாத் ( 4) ஆகியோா் உள்ளனா்.

இவா்களில் திருப்பதி மண்ணச்சநல்லூா் எதுமலைச் சாலையில் உள்ள வங்கி அருகிலும், இளவரசி மண்ணச்சநல்லூா்- திருச்சி சாலையில் உள்ள உணவகம் அருகிலும் கரும்பு சாறு விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இளவரசி கரும்புச் சாறு பிழிந்தபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.