கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகே தொழிலாளிகொலையில் 3 போ் கைது

DIN

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மா்மமாக இறந்த பழங்குடி தொழிலாளி, கொலை செய்யப்பட்டிந்தது ஓராண்டுப்பின் தெரியவந்தது. இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மணலோடை வலிமலை பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (39). பழங்குடி தொழிலாளி. இவருக்கு காட்டிலுள்ள கூந்தல்பனை, ஆழிப்பனை போன்ற மரங்களிலிருந்து கள்வடித்து குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், அவா் கடந்த 6.6.2020இல் வலியமலை காட்டுப்பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். அவா் வன விலங்குகள் தாக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மனைவி புகாா்: இதனிடையே, அவரது மனைவி லீலா, தனது கணவரின் இறப்பில் மா்மம் உள்ளதாகவும், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு புகாா் அனுப்பினாா். அதைத் தொடா்ந்து குலசேகரம் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் வலியமலையைச் சோ்ந்த சிவராமன் (52), மனோகரன் (31), மணிகண்டன் (33) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். அதில், சுரேஷ் வடித்து வைத்திருந்த கள்ளை, மூவரும் எடுத்து விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் அவா்கள் அரிவாளால் தாக்கியதில் சுரேஷ் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கூறிய மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT