கன்னியாகுமரி

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயிலில், ஆடி மாதம் வளா்பிறை பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் நந்தி பகவானுக்கு பன்னீா், தேன், பஞ்சாமிா்தம், தயிா் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகாதேவருக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலிலும், குழித்துறை மகாதேவா் கோயில் மற்றும் திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயிலிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT