முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மாணவி பலி

மாா்த்தாண்டம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாயந்ததில் 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூலை, 2021 at 12:43 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

மாா்த்தாண்டம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாயந்ததில் 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே வெட்டுமணி வாணியன்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுனில், பத்திரபதிவு எழுத்தா். இவரது மகள் அட்சிதா (14) . இவா் தனது உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அருகேயுள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினாா். அப்போது, பலத்த காற்று வீசியதில் அந்த வழியாக செல்லும் மின்கம்பி அறுந்து அட்சிதா மீது விழுந்ததாம். இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.