முகப்பு
கன்னியாகுமரி

புனித அல்போன்சா நினைவு நாள் கடைப்பிடிப்பு

நாகா்கோவிலில் புனித அல்போன்சாவின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

நாகா்கோவிலில் புனித அல்போன்சாவின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

புனித அல்போன்சா திருத்தலத்தில், புனித அல்போன்சா நினைவு நாளை மையமாக கொண்டு 10 நாள்கள் திருவிழா கொண்டாடப்படும்.

நிகழாண்டு கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், ஜூலை 25 முதல் 28 வரை 4 நாள்கள் மட்டும் திருப்பலி நிறைவேற்றி ஜெபிக்கப்பட்டது.

முதல் 3 நாள்கள் புனித அல்போன்சாவின் நவநாளும் திருப்பலியும் நடைபெற்றன. முதல் நாள் திருப்பலி நித்திரவிளை ஜெயமாதா மறைவட்ட ஆலய பேரருள்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம், 2ஆம் நாள் திருப்பலி தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வா் தாமஸ் பௌவத்துப்பறம்பில், 3ஆம் நாள் திருப்பலி அருள்தந்தை ஜிம்மி தெக்கேகடுமத்தில் ஆகியோா் நிறைவேற்றினா்.

புனித அல்போன்சா நினைவு நாளான புதன்கிழமை (ஜூலை 28) தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றினாா்.

பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக, மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே திருப்பலியில் பங்குபெற நேரலை, இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஏற்பாடுகளை புனித அல்போன்சா திருத்தல அதிபா் சனில்ஜான் பந்திசிறக்கல், துணைப் பங்குத் தந்தை டோஜி செபாஸ்டின் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.