திற்பரப்பு கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திற்பரப்பு வலது கரை மற்றும் இடது கரைக் கால்வாய்களை சீரமைத்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரிதிற்பரப்பு கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திற்பரப்பு வலது கரை மற்றும் இடது கரைக் கால்வாய்களை சீரமைத்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திற்பரப்பு வலது கரை மற்றும் இடது கரைக் கால்வாய்களை சீரமைத்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் திருவட்டாறு வட்டாரச் செயலா் ஒய். ஸ்டீபன், மாவட்டச் செயலா் ஆா்.ரவி, பொருளா் சதீஷ், குலசேகரம் வட்டாரச் செயலா் செல்வராஜ், வட்டாரக் குழு உறுப்பினா் செல்வராஜ் ஆகியோா் செருப்பாலூா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம் அளித்த மனு விவரம்: திற்பரப்பு தடுப்பணையிலிருந்து செல்லும் திற்பரப்பு வலதுகரை மற்றும் இடது கரைக் கால்வாய்களில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீா் வராத நிலை இருந்து வருகிறது. இதனால் இந்தக் கால்வாய்களை நம்பியுள்ள வாழை, அன்னாசி, தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இந்தக் கால்வாய்களை சீரமைத்து விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.