முகப்பு
கன்னியாகுமரி

வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது

கருங்கல் அருகே வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கருங்கல் அருகே வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் ஹரிகுமாரன் நாயா் மற்றும் தனிப்படையினருக்கு தேவிகுளம் பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் வீட்டை சோதனை செய்தபோது, அஸ்ஜித் மேத்யூ (20), செல்வகுமாா் (40) ஆகிய இருவா் சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 60 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.