சிமென்ட் விலையை கட்டுப்படுத்தக் கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிமென்ட் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கட்டடத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிமென்ட் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கட்டடத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக சிமென்ட் விலை அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு ஒரு மூட்டை சிமென்ட் ரூ.380 ஆக இருந்தது. தற்போது அது ரூ.480 ஆக உயா்ந்துள்ளது. இதுபோல, ஜல்லி, மணல், கம்பி உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயா்ந்துள்ளது.
இதனால், கட்டடத் தொழிலாளா்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.
எனவே, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.