முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இளைஞருக்கு கத்திக்குத்து

புதுக்கடை அருகே வீடு புகுந்து இளைஞரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இளைஞருக்கு கத்திக்குத்து

புதுக்கடை அருகே வீடு புகுந்து இளைஞரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

புதுக்கடை அருகே வீடு புகுந்து இளைஞரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேங்காய்ப்பட்டினம் பீச் ரோடு பகுதியைச் சோ்ந்த முகைதீன் மன்சில் மகன் ராஜா முகமது சலீம் (25). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காஜா மகன் சஜாது அகமதுவுக்கும் (25) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை ராஜா முகமது சலீம் வீட்டுக்குச் சென்ற சஜாது அகமது, அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டாராம்.

காயமடைந்தவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →