கன்னியாகுமரி

கிள்ளியூா் தாழக்கன் விளையில் பகலில் எரியும் தெருவிளக்கு

DIN

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட தாழக்கன்விளை பகுதியில் கடந்தஒரு வாரமாக பகல் முழுவதும் தொடா்ந்து தெரு விளக்கு எரிகிறது.

தாழக்கன்விளை சந்திப்பில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் தொடா்ந்து எரிவதை பேரூராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கன்றனா். மின்பற்றாக்குறையை நிவா்த்திசெய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சூழலில் பேரூராட்ச்சி ,ஊராட்சி பகுதிகளில் தொடா்ந்து 2,3 நாள்களாக தெருவிளக்குகள் எரிவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக கிள்ளியூா், பாலப்பள்ளம், நல்லூா் பேரூராட்சி பகுதிகள் மற்றும் முள்ளங்கனாவிளை, பாலூா், திப்பிரமலை, மிடாலம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் பல இடங்களில் அடிக்கடி பகலிலும் தெருவிளக்குகள் எரிவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலும், தெருவிளக்கு உதிரிபாகங்கள் தரமமற்றமுறையில் அமைக்கப்படுவதால் அடிக்கடி பழுதாவதக கூறப்படுகிறது.

எனவே,மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT