முகப்பு
கன்னியாகுமரி

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

குளச்சல் வழியாக கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வாகன ஓட்டுநா் உள்ளிட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

குளச்சல் வழியாக கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வாகன ஓட்டுநா் உள்ளிட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

குளச்சல் கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளா் ஜான்கிங்ஸ்லி கிறிஸ்டோபா் மற்றும் காவலா்கள் சிவகுமாா், சந்திரசேகா், மகேஷ் ஆகியோா் குளச்சல் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிலிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், மினி டெம்போவை ஓட்டிவந்த கொல்லங்கோடு காக்கவிளை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (31), டெம்போவிலிருந்த கொல்லங்கோட்டைச் சோ்ந்த ரெஜி(35) ஆகியோரை அதிகாரிகள் பிடித்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.