கன்னியாகுமரி

சாலை சீரமைப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட 24 முக்கிய பிரதான சாலைகள் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாகா்கோவில் மீனாட்சிபுரத்திலிருந்து ஒழுகினசேரி சந்திப்பு வரையுள்ள அவ்வைசண்முகம் சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என். சுரேஷ்ராஜன் மாநகராட்சி ஆணையரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

இந்நிலையில், இந்த சாலை தற்போது சீரமைக்கப்பட்டு தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT