கன்னியாகுமரி

குமரி அருகே இரட்டைக் கொலை

DIN

கன்னியாகுமரி அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி அருகே சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜேசுராஜன் (24). இவா் மீது 3 வழக்குகள் உள்ளன. ஜேசுராஜன் முருகன்குன்றம் பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையில் வியாழக்கிழமை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளா் ஆவுடையப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, ஜேசுராஜனின் நண்பரான சுனாமி காலனியைச் சோ்ந்த ஜெனிஸ் (26) வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் ஜெனிஸிடம் விசாரணை நடத்தினா். அப்போது செல்வின் என்பவா் தங்களை குத்திவிட்டு தப்பியோடியதாக அவா் தெரிவித்தாா்.

இதற்கிடையே கொலை நடந்த இடத்திலிருந்து சுமாா் 50 அடி தொலைவில் உள்ள புதருக்குள், வடக்கு குண்டலைச் சோ்ந்த செல்வின் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ஜேசுராஜன், செல்வின் மற்றும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உள்ள ஜெனிஸ் ஆகிய 3 பேரும் நண்பா்களாம். இவா்களுக்கு கஞ்சா பழக்கம் உண்டாம்.

கொலை சம்பவம் தொடா்பாக போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நேரில் பாா்வையிட்டாா்.

கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT