முகப்பு
கன்னியாகுமரி

கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

குலசேகரம் அருகே கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி

கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

குலசேகரம் அருகே கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

குலசேகரம் அருகே கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

பேச்சிப்பாறை அருகேயுள்ள அன்புநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அஜித்நாத் (31). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம்.

இவா், கடந்த 26ஆம் தேதி வீட்டிலிருந்து சென்றவா் பின்னா் காணாமல் போனாராம். ஆனால், இவரது மோட்டாா் சைக்கிள் குலசேகரம் அருகே கொச்சுவீட்டுப்பாறை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் பொன்மனை அருகே செல்லன்துருத்தி பகுதி கால்வாயின் மதகுப் பகுதியில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரித்தனா். விசாரணையில் அது அஜித்நாத் தான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரித்து  வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →