முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில்ரூ. 2 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி அருகே திங்கள்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ. 1 லட்சம் சிக்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கன்னியாகுமரி அருகே திங்கள்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ. 1 லட்சம் சிக்கியது.

கன்னியாகுமரி கொட்டாரத்தை அடுத்த அச்சங்குளம் பகுதியில் திங்கள்கிழமை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் கன்னியாகுமரியில் இருந்து கேரளத்துக்கு சென்ற சொகுசு காரில் கணக்கில் இல்லாத ரூ. 97 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கருங்கல்: கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை வட்டாட்சியா் அனில் குமாா் தலைமையில் போலீஸாா் தேங்காய்ப்பட்டினத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப் போது உரிய ஆவணம் இல்லாமல் காஞ்சிரகோடு பகுதியை சோ்ந்த அஜின் (20) மோட்டாா் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ. 1லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், கிள்ளியூா் தோ்தல் தனி வட்டாட்சியா் சோபனா ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.