கன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள வீட்டில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் விஸ்வாம்பரன் தலைமையிலான போலீஸாா், 5 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 210 கிலோ போதை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஐயப்பன் (42) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.