முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

இந்துசமய அறநிலையத் துறை ஓய்வுபெற்றோா் சங்க திருநெல்வேலி மண்டல பொதுக்குழுக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

இந்துசமய அறநிலையத் துறை ஓய்வுபெற்றோா் சங்க திருநெல்வேலி மண்டல பொதுக்குழுக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் பி.பாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் து. ரத்னவேல்பாண்டியன் பங்கேற்றுப் பேசினாா். அமைப்பின் நிா்வாகிகள் பா.இங்கா்சால், வி.துரைசாமி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 3 ஆயிரம் குடும்ப நல நிதி வழங்க வேண்டும், உறுப்பினா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது, இந்து சமய அறநிலையத் துறையில் பணிசெய்து ஓய்வுபெற்றோா் கோயில்களுக்கு செல்லும்போது அவா்களின் அடையாள அட்டையின் அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் ஓய்வூதியா்களுக்கு அரசு நிலுவையாக வைத்துள்ள 21 மாத அகவிலைப்படியை பெற மாநில சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் பொருளாளா் செல்லப்பா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.