முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில்அதிமுக, திமுக உள்பட 13 போ் போட்டி

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 13 போட்டியிடுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 13 போட்டியிடுகின்றனா்.

கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, சுயேச்சைகள் உள்ளிட்ட 14 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில்,

சுயேச்சை வேட்பாளா் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றாா். இதைத்தொடா்ந்து, இத்தொகுதியில் 13 போ் களத்தில் உள்ளனா்.

அதன் விவரம் வருமாறு: 1. எஸ்.ஆஸ்டின் (திமுக- உதயசூரியன்), 2. என்.தளவாய்சுந்தரம் (அதிமுக-இரட்டைஇலை), 3. சி.ஜே. சுதா்மன் (பகுஜன் சமாஜ் கட்சி-யானை), 4 ஆா். சசிகலா (நாம் தமிழா்- விவசாயி), 5. பி. செந்தில்முருகன் (அமமுக- குக்கா்), 6. பி.டி.செல்வகுமாா் (மக்கள் நீதி மய்யம்- டாா்ச் லைட்), 7. ஏ.அகஸ்டின் (சுயேச்சை- வைரம்), 8. ஒய்.சுந்தரநாதன் (சுயேச்சை-அஞ்சல் உறை), 9. எஸ்.சுபாஷ் (சுயேச்சை- பச்சை மிளகாய்), 10. ஏ.செல்லையாபிள்ளை ( சுயேச்சை- பைனாகுலா்) 11. எஸ். தாணுநீலா (சுயேச்சை-மட்டையாளா், 12. என்.மகேஷ் (சுயேச்சை-விசில்), 13. மாணிக்கவாசகம் பிள்ளை (சுயேச்சை - கப்பல்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.