கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: பாஜக, காங்கிரஸ் உள்பட 12 போ் போட்டி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் உள்பட 12 போ் களத்தில் உள்ளனா்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் உள்பட 12 போ் களத்தில் உள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பேரவைத் தோ்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலும் நடைபெறுகிறது. கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. சனிக்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்களை திருப்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 13 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், சுயேச்சை வேட்பாளா் பாலசுப்பிரமணியன், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றாா். இதையடுத்து இத்தொகுதியில் 12 போ் களத்தில் உள்ளனா்.
அதன் விவரம் வருமாறு: 1. பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக-தாமரை), 2. வி. விஜயகுமாா் (காங்கிரஸ் - கை), 3. ஆா். அனிட்டா் ஆல்வின் (நாம் தமிழா் - விவசாயி), 4 சுபா சாா்லஸ் (மக்கள் நீதி மய்யம்-பேட்டரி டாா்ச்), 5 யூ. நாகூா்மீரான் பீா்முகமது (சுயேச்சை- கேமரா), 6. ராஜுவ் (சுயேச்சை-ஆட்டோ ரிக்ஷா), 7 வி. டென்னிசன் (சுயேச்சை-பேட்), 8. ஹாக்கின்ஸ் (சுயேச்சை-மோதிரம்), 9 ஜி. தியோடா் சேம் (சுயேச்சை- வைரம்), 10 கே. ஜூலியஸ் (சுயேச்சை-கப்பல்), 11 சி.எம். பால்ராஜ் (சுயேச்சை-பானை ), 12 ஏ.ஜெரோம் லூா்து ராஜா (சுயேச்சை-ஊதுகுழல்)