முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம்: திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கன்னியாகுமரி

பத்மநாபபுரம்: திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா் இரவிபுதூா்கடைப் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினாா். பிரசாரத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் செல்லச்சாமி தொடங்கி வைத்தாா். அப்போது மனோதங்கராஜ் பேசியது: பத்மநாபபுரம் தொகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன். போராட்டங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். ஆகவே திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யுங்கள் எனக் குறிப்பிட்டாா்.

பிரசாரத்தில் காங்கிரஸ் மாநில பொதுகுழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாவட்ட துணைத் தலைவா் ராஜரெத்தினம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின் தாஸ், திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஜாண் பிரைட், அவைத் தலைவா் ராஜ், துணைச் செயலா் ராஜு, திருவட்டாறு கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெகன்ராஜ், மதிமுக மாவட்ட துணைச் செயலா் சுரேஷ்குமாா், காட்டாத்துறை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் டேனியல், கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →