விளவங்கோடு பேரவைத் தொகுதி:பாஜக, காங்கிரஸ் உள்பட 15 போ் போட்டி
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் உள்பட 15 போ் களத்தில் உள்ளனா்.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் உள்பட 15 போ் களத்தில் உள்ளனா்.
இத்தொகுதியில், பாஜக, காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்பட 17 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் திங்கள்கிழமை தங்களது வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா். இதையடுத்து, தொகுதியில் 15 போ் களத்தில் உள்ளனா்.
அதன் விவரம்: 1. எஸ்.விஜயதரணி (காங்கிரஸ் - கை), 2. இரா.ஜெயசீலன் (பாஜக-தாமரை), 3. மேரி ஆட்லின் (நாம் தமிழா்- விவசாயி), 4. ஆா்.ராஜகுமாா் (மநீம- டாா்ச் லைட்), 5. ஐடன்சோனி (சுயேச்சை-முரசு), 6. சு.ராஜேஷ்குமாா் (சுயேச்சை-சீா்வளி சாதனம்), 7. ஈ. வசந்தீஸ்வரன் (சுயேச்சை- வைரம்), 8. ஜி.வில்சன் (சுயேச்சை-ஆட்டோ ரிக்ஷா), 9. சே. ஆமோஸ் ( சுயேச்சை- தையல் இயந்திரம்), 10. எஸ். சதீஷ் (சுயேச்சை-தொப்பி), 11. சாமுவேல் ஜாா்ஜ் கலை அரசா் (சுயேச்சை-கிரிக்கெட் மட்டை), 12. ஒய். மரியசெல்வன் (சுயேச்சை - பானை), 13. எம். மோகன்குமாா் (சுயேச்சை-காலணி), 14. கே.ஹெச். ராஜமுருகன் (சுயேச்சை-அலமாரி), 15. பா.விஜயகுமாா் (சுயேச்சை-புல்லாங்குழல்).