முகப்பு
கன்னியாகுமரி

‘வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம்’

வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல், குமரி மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் பணியில் ஈடுபடும்

வாக்குப்பதிவு அலுவலா்கள், ஊழியா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமன்புதூா் பீட்டா் ரெமிஜியுஸ் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியா் மா. அரவிந்த் ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல், 6 சட்டப்பேரவைத்

தொகுதிகளுக்கான தோ்தலை நோ்மையாகவும், பாதுகாப்பாகவும், 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை கண்காணிக்க

பொறுப்பு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களில் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம், நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமன்புதூா் பிஷப் பீட்டா் ரெமிஜியஸ் பள்ளி, சுங்கான்கடை செயின்ட் சேவியா்ஸ் பொறியியல் கல்லூரி, மாா்த்தாண்டம் திருஇருதயப் பள்ளிகளில் நடைபெற்றது.

தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், கல்லூரி பேராசிரியா்கள், பிற

அரசு துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடுவது, மின்னணு இயந்திரங்களை கையாள்வது

என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் முழுமையாக பணியில் ஈடுபடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) சி.ஏ. ரிஷாப், கோட்டாட்சியா் அ. மயில், மாவட்ட வழங்கல் அலுவலா் சொா்ணராஜ், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஆா்.நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் த.மாதவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) பத்ஹூ முகம்மது நசீா், வட்டாட்சியா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.