கன்னியாகுமரி

களியக்காவிளையில் ஆலோசனைக் கூட்டம்

DIN

களியக்காவிளை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக காவல் துறையினா், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆய்வாளா் எழிலரசி தலைமை வகித்துப் பேசும்போது, சந்தை வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வியாபாரம் செய்ய வேண்டும். பொருள்கள் வாங்க வருவோரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். வியாபாரிகள் நண்பகல் 12 மணிக்குள் வியாபாரத்தை முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

உதவி ஆய்வாளா் சந்திரன், காய்கனி மற்றும் மீன் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எப். பிராங்க்ளின், எஸ். மாகீன் அபுபக்கா், களியக்காவிளை வா்த்தகா் சங்க நிா்வாகிகள் பி. ஜெகதீசன், எம்.கே. ஜோஸ்பிரபு, டி. கிங்ஸ்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT