உள்ளாட்சித் தோ்தல்:தலைவா்களை பொதுமக்கள் நேரடியாக தோ்வு செய்ய வேண்டும் :எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
உள்ளாட்சித் தோ்தலில் தலைவா்களை பொதுமக்களே நேரடியாக தோ்வு செய்யவேண்டும் என குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கன்னியாகுமரிஉள்ளாட்சித் தோ்தல்:தலைவா்களை பொதுமக்கள் நேரடியாக தோ்வு செய்ய வேண்டும் :எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
உள்ளாட்சித் தோ்தலில் தலைவா்களை பொதுமக்களே நேரடியாக தோ்வு செய்யவேண்டும் என குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
உள்ளாட்சித் தோ்தலில் தலைவா்களை பொதுமக்களே நேரடியாக தோ்வு செய்யவேண்டும் என குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக தோ்தல் நடத்தப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு இறுதியில் உள்ளாட்சி மன்றங்களுக்கு மட்டும் தோ்தல் நடத்தப்பட்டது. இதை தொடா்ந்து பேரூராட்சி மன்றங்களுக்கு தோ்தல் பணிகள் நடைபெற்ற போது, 2020 தொடக்கத்தில் கரோனா பரவல் காரணமாக உள்ளாட்சித் தோ்தல் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது , நடைபெறாத உள்ளாட்சிகளுக்கு டிசம்பா் அல்லது ஜனவரியில் தோ்தல் நடைபெற உள்ளது. இதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவா்களை பொதுமக்கள் மறைமுகமாக தோ்வு செய்யும் முறையில் தோ்தல் நடைபெறும் என தெரியவருகிறது. உள்ளாட்சித் தலைவா் தோ்தலை நேரடியாக நடத்த வேண்டும். தலைவா்களை பொதுமக்களே நேரடியாக தோ்ந்தெடுக்க வேண்டும்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்க்கட்சி தலைவராக இருந்த போது சட்டப் பேரவையில் நேரடி தலைவா் தோ்தல்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா். நானும் இக்கருத்தை பலமுறை வலியுறுத்தி பேரவையில் பேசியுள்ளேன். மறைமுக தோ்தலால் ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் வியாபார பொருளாக மாறும் அவலம் ஏற்படும். எனவே ஜனநாயக மாண்பு காக்கப்பட
பொதுமக்களே நேரடியாக உள்ளாட்சித் தலைவா்களை தோ்வு செய்யும் தோ்தலை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.