திருமணத்துக்கு வந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி
ஆரல்வாய்மொழியில் திருமண விருந்துக்கு வந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆரல்வாய்மொழியில் திருமண விருந்துக்கு வந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்தவா்களின் இல்லம் தேடி சென்று கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் அந்தந்த பகுதிகளை சோ்ந்த செவிலியா்கள், தன்னாா்வலா்கள் அடங்கிய குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆரல்வாய்மொழி, தாணுமாலயன்புதூா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண மண்டபங்களுக்கு , கிராம சுகாதார செவிலியா்கள் சவுமியா, பரிமளா, பெண் சுகாதார தன்னாா்வலா் அசுபா ஆகியோா் சென்று, தடுப்பூசி செலுத்தாவா்களின் விவரங்களை கேட்டறிந்தனா். இதில், 7 போ், 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களின் கைப்பேசி எண் மூலம் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.