கன்னியாகுமரி

குமரியில் மழையின் தீவிரம் குறைந்ததுஅணைகளிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றம்

DIN

குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை மழை சற்று தணிந்து காணப்பட்ட நிலையில் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த வெள்ளி, சனி ஆகிய தினங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாவட்டம் தண்ணீரில் தத்தளித்த நிலை ஏற்பட்ட நிலையில் கடந்த 2 நாள்களாக மழையின் தீவிரம் சற்று தணிந்துள்ளது. திங்கள்கிழமை அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் சாரல் மழை மட்டுமே அவ்வப்போது பெய்தது. இதனால் அணைகளுக்கு உள்வரத்தாக வரும் தண்ணீரின் அளவு கணிசமாகக் குறைந்தது .

10 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றம்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 40 ஆயிரம் கன அடி வரை நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில் திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி இந்த அளவு சுமாா் 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 5972 கன அடிநீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6239 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 3470 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 3192 கன அடி

நீா் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு 1 அணைக்கு விநாடிக்கு 536 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து இதே அளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு 2 அணைக்கு விநாடிக்கு 224 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு இதே அளவு நீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT