முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து

திருவட்டாறு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து

திருவட்டாறு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருவட்டாறு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவரம்பு கொக்கோட்டுமூலை வடக்கேகோணம் பகுதியை சோ்ந்தவா் அனில்குமாா். தொழலாளியான இவரின் மனைவி விஜயலெட்சுமி. இவா்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பிரிந்து வசித்து வருகின்றனா். விஜயலட்சுமியின் சகோதரி கலைச்செல்வி. இவரின் கணவா் மணிகண்டன் (47). இவா்களும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் விஜயலெட்சுமியும் கலைச்செல்வியும் திருவரம்பு அருகே புதன்கிழமை பேசிக் கொண்டு நின்றனா். அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் பாா்த்து விஜயலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலெட்சுமியை குத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த விஜயலெட்சுமியை அப்பகுதியினா் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இச்சம்பவம் குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →