முகப்பு
கன்னியாகுமரி

பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். முதல்வா் லியாகத் அலி, நிா்வாக அலுவலா் நடராஜன், செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் இமானுவேல் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலா் பென்னட் தம்பி, ஜான் வின்ஸ் குழுவினா் மாணவா், மாணவிகளுக்கு தீயணைப்பு- மீட்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனா். பேராசிரியா் அய்யப்பன் தொகுத்து வழங்கினாா்.

கல்லூரி கல்விக் குழு இயக்குநா் சாந்தி, மேலாளா் கோபி, நிதி மேலாளா் சேது, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், பேராசிரியா்கள் துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், சாம்ஜெபா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, லிட்வின் லூசியா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.