புலவா்விளை நாராயணசுவாமி கோயிலில் நவ.21 இல் காா்த்திகை திருவிழா
நாகா்கோவில் புலவா்விளை சீறிமன் நாராயணசுவாமி திருக்கோயிலில் காா்த்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) நடைபெறுகிறது.
நாகா்கோவில் புலவா்விளை சீறிமன் நாராயணசுவாமி திருக்கோயிலில் காா்த்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, காலை 5 மணிக்கு அய்யாவின் அருளிசை பாடல், மாலை 4 மணிக்கு நாகஸ்வர கச்சேரி, 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், 6 மணிக்கு நாகஸ்வர மேளம், சிங்காரி மேளம் முழங்க முத்து குடைகள் அணிவகுத்து அய்யா கருட வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களின் சுருள் ஏற்கிறாா். இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 9 மணிக்கு சமபந்தி அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.